தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும் உள்ள அரசின் 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற துவங்கியது. 1,07,395 தேர்ந்தெடுக்க உள்ள நிலையில், மே 22ம் தேதி வரை நடந்த விண்ணப்ப பதிவுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று (மே 25) வெளியாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் மே 30 முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் ஜூன் 12 முதல் 20ம் தேதி வரை நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளுக்கு ஜூன் 22ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.