தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், சில நாட்களாக காற்று மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று முதல் ஏப்ரல் 4 தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.