தமிழக மக்கள் பெரும்பாலானவர்கள் ரயில் பயணங்களை அதிகம் விரும்புகின்றனர். காரணம் ரயில்களில் கட்டணம் குறைவாகவும், சௌகரியமான பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. மேலும் அதிகம் நேரம் பயணம் செய்ய பலர் ரயில்களை நாடுகின்றனர். அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தனியார் உணவு விற்பனை நிலையங்கள் மூலமாக உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்
வெளியே வாங்கும் உணவை விட ரயில் நிலையங்களில் உணவு விலை குறைவாக இருக்கிறது. மேலும் 2008 ஆம் ஆண்டுக்கு பின் இந்த உணவு விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஜனவரி 16 ஆம் தேதி முதல் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொருள்களின் விலை அதிகரிக்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு, சமையல் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விலை ஏற்றம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக விற்பனை செய்யப்படும் டீ, காபி போன்றவற்றின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை
மற்ற உணவு பொருள்களின் விலையில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சட்னி சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.20க்கும், மசால் தோசை ரூ.16 இருந்து ரூ.25 ஆகவும், மெதுவடை, மசால் வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.