திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமியன்று அன்று கிரிவலம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இன்று (செப்.29) திருவண்ணாமலை மாவட்டத்தில் பௌர்ணமி கிரிவலம் நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக வேலூர் பகுதியில் இருந்து இன்று 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என வேலூர் மண்டல பொது மேலாளர் அறிவித்துள்ளார். கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.