பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வரும் 17ம் தேதி மாநில அளவில் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ராஜேந்திரன், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு 42 ரூபாயும், எருமைபால் 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும், கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- Advertisement -
மேலும், தங்களது கோரிக்கையை ஏற்று அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், வரும் 17ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் போரட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.