தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்க பணம் அத்துடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக முதல்வர் முழு கரும்பு வழங்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் அரசு ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது கரும்பை முறையாக கொள்முதல் செய்ய அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் கரும்பு தரம் உள்ளதாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்யப்படவுள்ள கரும்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
Leave a Comment