தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வாரமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வேலை வழங்குபவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவதே இந்த முகாமின் நோக்கமாகும். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற ஜனவரி 28 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
அதில் 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் 28 ஆம் தேதி காலை நேரடியாக வர வேண்டும். அது மட்டுமில்லாமல் முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.