சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பணியாளர்கள் வேலைக்கு சென்று வரும் நேரங்களில் பேருந்து பயணத்தின் போது நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சென்னையின் முக்கிய வழித்தடங்களில் கூடுதலாக தனியார் பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்து துறை திட்டமிட்டது. இதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 500 தனியார் பேருந்துகளை தொகுப்பூதியத்தில் இயக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான தொகையை வசூல் செய்ய நிர்ணயம் செய்யப்படும். இதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கிய நிலையில் CITU கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளை போல சென்னையில் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவே டெண்டர் பணி விடப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர், மகளிர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடருமே தவிர நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட தமிழக அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Comment