உலகமே இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் உற்று நோக்குகிறது என்றும், தடைகள் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 மணி முதல் 11 இருபது வரை விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் ஒருவர் கலந்து கொண்டது இது முதல்முறையாகும்.
கிண்டி ராஜ்பவனில் நேற்றிரவு தங்கி இருந்த பிரதமர் திரு. மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் திரு. மோடி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும் என்றும், முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்தவர் என்றார். அவரது சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பவை என்று குறிப்பிட்டார்.
பிரதமர் வருகையால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh