தை மாதம் முதல் நாளான இன்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.