tn bus

பொங்கல் சிறப்பு பேருந்து.. நாளை அமைச்சர் ஆலோசனை..!

பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்க வேண்டும். எந்தெந்த வழத்தடங்கள் என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.