பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இதற்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 3) முதல் வீடு வீடாக வந்து வழங்கப்படுகிறது. ஜனவரி 9ம் தேதி முதல் பரிசுத்தொகுப்பை பெறலாம்.
