பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார்.
- Advertisement -
பொதுமக்கள் 20 பேருக்கு 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் மற்றும் வேட்டி – சேலை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக பணிகள் தொடங்கி உள்ளது.