தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் 14,104 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகள் தவிர, 10-13 தேதிகளில் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையில் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1.73 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆன்லைன் மூலம் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக ஜனவரி 15 முதல் 19 வரை மொத்தம் 15,800 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு 22,676 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.