தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது நியாயமில்லை. அவர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.