தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக ரேஷன் கடைகள் வாயிலாக பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு திமுக தலைமையிலான அரசு 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது.
2023 ஆம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன பரிசு தொகுப்பை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த முறை வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் மக்கள் பணப்பரிசை வழங்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1000 வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் பாஸ்கரன் பொங்கலுக்கு பரிசு பொருட்கள் வழங்க அரசு யோசித்துக் வருவதாக கூறியுள்ளார். மேலும் என்ன வழங்கலாம் என அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.