திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகிவிட்டது. அதே போல இந்தமாத கிரிவலத்திற்காக 500 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. அதாவது, இந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கமாகிவிட்டது. உள்மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டு பயணிகள் கூட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விஷேச தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அதனை விட கிரிவலத்திற்கு எக்கச்சக்கமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. இதனால், கிரிவலத்திற்காக வரும் பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று மட்டும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த மாதம் ஜூலை 13 ஆம் தேதி பௌர்ணமி என்பதால் கிரிவலத்திற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதாவது, ஜூலை 13 ஆம் தேதி காலையில் இருந்து இரவு வரைக்கும் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh