கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு மாணவர் அமைப்பினரும் உறவினர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு சில நாட்களில் கலவரமாக உருவெடுத்தது. இதன் காரணமாக கலவரத்தில் பள்ளியில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், மேஜைகள், பள்ளி வாகனங்கள் போன்றவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் பயின்ற 4500 மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் அப்பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. மேலும் இது குறித்து ஒரு சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கல்வியை தொடரும் விதத்தில் அவர்களுக்கு வேறு பள்ளியில் பயில அனுமதி வாங்கி தரப்படும் என்றும் விரைவில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கல்வியை தொடரும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் பயின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 9,10,11,12ம் வகுப்புகள் மிக முக்கியமான வகுப்புகள் என்பதால் அவர்களை உடனடியாக Board Exam-க்கு தயார் செய்யும் சூழ்நிலை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பிறகு நேரடியாக பாடம் நடத்த தேவையான வகுப்பறைகளை தயார் செய்து தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. இந்த நிலையில் எந்தெந்த மாணவர்களுக்கு டூப்ளிகேட் காப்பி இல்லையோ அவர்களுக்கு உடனே மாற்று சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த பணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியாக ஒரு ஸ்பெஷல் DEO போட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh