நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் த.வெ.க-வின் முதல் மாநாடு தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்த மாநாட்டில் இருந்து அரசியல் பெரும்பாதையை அமைப்போம்’.’முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தமிழ்நாட்டு மண்ணை சேர்ந்த மகனாக தமிழ்நாடு மக்களின் ஆதரவை வேண்டுகிறேன்’ என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.