தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழாக்களில் பங்கேற்கும் வகையிலும் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.
அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.