தொழிலாளர் north indians

சேலத்தில் வட மாநிலத்தவர்கள் புகாரளிக்க எண் அறிவிப்பு

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்‍கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து நம்பிக்‍கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் புகாரளிக்க எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9370034756 மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 1077 மற்றும் 0427-2450498, 2452202 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும் 9629390203 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.