“இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை” – யு.ஜி.சி தலைவர்
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்து தென் மண்டல அளவிலான தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நேற்று (நவம்பர் 14) சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பிறகு, யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
அதில், ‘மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும்’. ‘படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது’ என்றார்.
Posted in: தமிழ்நாடு