- Advertisement -
கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பின்பு சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அவரவர் சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் சிறப்பு பேருந்துகள் உள்ளன. கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
- Advertisement -