தனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழித்துவிட்டீர்கள்; கேள்வி கேட்க வந்துவிட்டீர்கள் என திமுக அமைச்சர் பொன்முடியின் ஆணவப் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உயர்க்கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி, அமைச்சர் பொறுப்பை உணர்ந்து, செயல்படாமல் தொடர்ந்து பொது வெளியில் ஆணவத்துடனும், கேலியும், கிண்டலுமாகவும் பேசி மீண்டும், மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
- Advertisement -
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து விழாவில் பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளை தாம் தான் செய்து கொடுத்ததாக பேசினார். இதைக்கேட்ட பெண்கள் சிலர், குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர்.
- Advertisement -
இதனால் ஆத்திரமடைந்த திமுக அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்… நான் எப்போ வந்தாலும் இந்த இப்படி தான் கத்துவீங்கன்னு தெரியும் என ஆணவமாக பேசினார்.
திமுக அமைச்சர் பொன்முடியின் இந்த சர்ச்சை பேச்சால் கொந்தளித்த கிராம மக்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது பேச்சை முடித்து கொண்டு வேகமாக அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.