ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தாலே போதும், பொது தேர்வு எழுதலாம் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.
இதையடுத்து ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.
