தமிழ்நாட்டில் பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் சமீபத்தில் தொடங்கியது.
- Advertisement -
இத்தேர்வுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்வை முன்கூட்டியே நடந்த கல்வித் துறை தற்போது திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்முறை தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். அரசின் இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.