ma.subramaniyan 1

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் சுமார் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பணிக்காலம் 2022 ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்ததால், ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார் போல பணி வழங்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.