சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 6ம் தேதி நடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.
சிதம்பர நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா வழக்கமாக மார்கழி மாதம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் கொடியேற்றம் டிசம்பர் 28ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்றது. மேலும், ஜனவரி 5ம் தேதியான நாளை தேரோட்டமும், ஜனவரி 6ம் தேதியான நாளை மறுநாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதனால், கடலூர் மாவட்ட நிர்வாகம் சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 6ம் தேதி அன்று அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மற்றும் அரசு அலுவலங்களும் செயல்படாது. இதற்கு பதிலாக ஜனவரி 28ம் தேதி அன்று பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.