தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். தை மாதம் முழுவதும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் ஆனது பழனியில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண கோயிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தற்போது அரசு செய்து வருகிறது.
மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு திண்டுக்கலில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ம் தேதி பணி நாளாக இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.