உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகிஸ்தராக என செயல்பட்டு வந்தார்.
பின்னர் திமுகவில் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, கலக தலைவன் கடைசியாக மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதிஸ்டாலின் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், “ இனி படங்களில் நடிக்க மாட்டேன்.மாமனிதன் தான் என்னுடைய கடைசி படம்”என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், உதயநிதிஸ்டாலின் அமைச்சரானதால் இதுவரை அவர் நிர்வகித்து வந்த ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பில் உதயநிதிக்குப் பதிலாக கிருத்திகா உதயநிதி நியமிக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.