நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ வோடபோன், ஐடியா ஆகியவை 5ஜி இணைய சேவையை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான Reliance Jio நாடு முழுவதும் 50 நகரங்களில் 5ஜி சேவையை விரிவு படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் மட்டும் 11 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தருமபுரி, ஓசூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நகரத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டதும் Jio Welcome Offer வழங்கப்படும். அதன் மூலம் பயனர்கள் 1GB/PS வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம்.
இந்த Welcome Offer பெற பயனர்கள் 239 ரூபாய்க்கு மேல் மாத ரீசார்ஜ் செய்ய வேண்டும். தமிழகத்தில் 5ஜி சேவை தொடங்கப்படும் நகரங்களில் இதன் மூலம் தொழில்துறை மற்றும் இணைய சேவை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.