jio 5g

தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை..!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரூ 5ஜியை நாடு முழுவதும் துரிதமாக விரிவுபடுத்தி வருகிறது.

அந்த வகையில், மார்ச் 15 புதன்கிழமை இன்று, 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மேலும் 34 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகள் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஜியோவின் 5ஜி சேவைகள் தொடங்கிய நகரங்களின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தகவலின்படி, தற்போது நாமக்கல், புதுக்கோட்டை, ஆம்பூர், ராமநாதபுரம், சிதம்பரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய 8 நகரங்களில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.