கோவையில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு ‘சிறு தானிய மாநாடு 2023’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர், “வரும் காலங்களில் நியாயவிலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும். தமிழ்நாட்டின் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் விரைவில் கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படும்” என்றார்.