தமிழகத்தில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரையில் இன்று ஒரே நாளில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கி, சுத்தமான தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஒரு குழந்தை உள்பட 10 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.