முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 616 கன அடியாக அதிகரித்துள்ளது.
வீரபாண்டி பகுதியில் முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 129 அடியை எட்டியுள்ளது.