சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனம் அதிகரித்துள்ளது.
இதனால், குமுளி லோயர் கேம்ப் இடையில் உள்ள வனச்சாலையில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. கேரள எல்லையில் வாகன அனுமதி சீட்டு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
- Advertisement -
இதனால் சபரிமலைக்கு செல்லும் வாகனமும், சபரிமலையில் இருந்து தேனி நோக்கி வந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் லோயர்கேம்ப் – குமுளி வனசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.