தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
