தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.7) பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை கடந்த டிசம்பர் மாதம் வலுவாக பெய்து, பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த விடுமுறைகளை தவிர இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக விடப்படும் விடுமுறைகளுக்கு பதிலாக வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
கனமழையின் காரணமாக காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 12ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக ஜனவரி.7 ம் தேதி சனிக்கிழமை இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.