தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் காரணத்தினால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும்படி முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், 10 பேருக்கு மேல் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த அளவிற்கு தடுக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் மக்கள் கட்டாயமாக போட்டிருக்க வேண்டும் எனவும், மூன்றாவது தவணை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படியும் சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. மேலும், பேருந்துகளில் பயணிக்கும் போதும் கட்டாயமாக பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் என அனைவருமே கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுமே திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்கும்படி முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுட்டறிக்கை அனுப்பியுள்ளார். இதனிடையே, மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்பதை பள்ளி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த மாணவரை உடனடியாக தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh