Annamalai Bjp

“முடிந்தால் என் மீது கை வையுங்கள்” – அண்ணாமலை

வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை தாம் அறிக்கையாக வெளியிட்டிருந்ததாகவும், அதனை காணொலியாக வெளியிடுவதாகவும் திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் தம்மை கைது செய்யுமாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை வெளியிட்டதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் தன்னை கைது செய்யுமாறும், பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சாமானிய மனிதனாக சொல்வதாகவும், 24 மணி நேரம் கால அவகாசம் அளிப்பதாகவும் முடிந்தால் என் மீது கை வையுங்கள் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.