தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் கோயிலின் ஆராதனை விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு 176-வது ஆராதனை விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விழா பொதுவாக 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நாளான ஆராதனை வழிபாடு விழா ஜனவரி 11ம் தேதி அன்று நடக்க உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள்.
இதனால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜனவரி 11ம் தேதி அன்று, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் செயல்படாது என்றும், குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 21ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.