தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் கடந்த கல்வியாண்டுகளில் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் மாணவர்களின் கற்றல் திறன் கேள்வி குறியானது.
அதன் பிறகு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொற்று ஓரளவு குறைந்த பிறகு கல்லூரிகளில் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2022- 2023ம் கல்வியாண்டுக்கான படங்களை விரைந்து நடத்தி முடிக்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து பாடங்களை வேகமாக நடத்தி முடிக்க ஏதுவாக தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.