images 77

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே 2 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முழு விவரம் இதோ!!

இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இந்த தொற்று பரவல் நிலை குறைந்து இயல்பிற்கு வந்த பின்னர் தான் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வாரியம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே ஜனவரி 21 மற்றும் 28ம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் மறுமார்க்கமாக ஜனவரி 22 மற்றும் 29ம் தேதிகளில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்பாடி- ஜோலார்பேட்டை இடையிலான ரயில்கள் ஜனவரி 7,11 மற்றும் 27 ஆகிய 3 நாட்களிலும் இரண்டு மார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.