tn rain 2

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து பனிமூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் இன்று வட தமிழகத்தில் உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகாலையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌ என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை தகவல் குறித்த அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக நாளை (ஜன.03) தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும், உள்‌ மாவட்டங்களில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வருகிற 4ம் தேதி முதல்‌ 6ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மற்ற மாவட்டங்களில்‌ வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.