Advertisement
Advertisement
Advertisement
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், இது வரும் 26ம் தேதி காலை இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால், நாளை தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
Advertisement
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement