விளம்பரம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் இன்று கனமழை
விளம்பரம்
மேலும், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்