தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில், அது அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.