தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்களும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.