தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப்பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வெகு தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் கல்வி பயில முடியும் என்று அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யும் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிக அளவு கூட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படி ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்வது உண்டு. இதனை தடுப்பதற்கு அரசு தேவையான வழிமுறைகளை செய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் சென்னையின் முக்கிய 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் பேருந்துகளின் மூலம் கிட்டத்தட்ட 20 முதல் 22 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.