தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. ஆனால் 7 மாதங்களாகியும் தற்போது வரை இதற்கான ரிசல்ட் வெளியிடப்படவில்லை. கடந்தாண்டு பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்ததால், இந்தத் தேர்வு முடிவில் தாமதம் ஏற்பட்டதாக தேர்வாணையம் அறிவித்திருந்தது.
ஆனால் இதற்கான தீர்ப்பு வந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும், ரிசல்ட் வந்த பாடில்லை. இதையடுத்து தற்போது TNPSC இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முந்தைய ஆண்டுகளில் தேவர்கள் எண்ணிக்கை வெறும் 10 முதல் 17.5 லட்சம் வரை மட்டுமே இருந்தது.
ஆனால் கடந்தாண்டு நடந்த தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியிருந்தனர். இதனால், இதில் குளறுபடிகள் ஏற்படாத வகையில், தேர்வுத்தாள்களை double valuation செய்ய வேண்டி இருப்பதால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது. எனவே, இந்த அனைத்து பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாதம் இந்த தேர்வு முடிவு வெளியாகும் என அறிவித்துள்ளது.